நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : காளையார்கோயில் அருகேயுள்ள புலியடிதம்பத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் 55. மனைவி ஜெயக்கொடி. எட்டு ஆண்டுகளாக தேவகோட்டை அருகே மருத்தாணியில் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் பாய்ச்சும் போது கீழே விழுந்ததில் விஸ்வநாதன் காயமடைந்தார். சிகிச்சை செய்த போதிலும் வலி இருந்தது. வலி தாங்காமல் அவதிப்பட்ட விஸ்வநாதன் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து உள்ளார். மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

