நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா பள்ளி தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது. தமிழாசிரியை ஜெயந்தி வரவேற்றார்.
சிறுவாச்சி பள்ளி தலைமையாசிரியை விண்ணரசி தமிழின் சிறப்பு பற்றி பேசினார்.
மாணவர்களுக்கு தமிழ் பண்பாடு தொடர்பாக கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சுப்போட்டி, நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினர்.
கலைநிகழ்ச்சிகள் நடந்தன உதவி தலைமையாசிரியை விமலா, ஆசிரியை கார்த்திகா, ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் பங்கேற்றனர்.

