நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே தென்னளிவயல் கிராமத்தை சேர்ந்த செந்தில் முருகன் மனைவி கண்மணி 28. இருவருக்கும் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 4 வயதில் மகள் உள்ளார்.
செந்தில் முருகன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். கண்மணி நேற்று தனது வீட்டில் தீ வைத்து இறந்துள்ளார்.
கண்மணி வீட்டில் இருந்து தீ புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர்போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சிவகங்கை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன் கண்மணியின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

