/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலையில் பழுதாகும் வாகனங்கள் கண்டு கொள்ளாத நெடுஞ்சாலை ஆணையம்
/
நான்கு வழிச்சாலையில் பழுதாகும் வாகனங்கள் கண்டு கொள்ளாத நெடுஞ்சாலை ஆணையம்
நான்கு வழிச்சாலையில் பழுதாகும் வாகனங்கள் கண்டு கொள்ளாத நெடுஞ்சாலை ஆணையம்
நான்கு வழிச்சாலையில் பழுதாகும் வாகனங்கள் கண்டு கொள்ளாத நெடுஞ்சாலை ஆணையம்
ADDED : பிப் 01, 2024 11:13 PM

திருப்புவனம்,- மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பழுதாகும் வாகனங்களை சரி செய்யவோ அப்புறப்படுத்தவோ அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் விபத்து நேரிட்டு வருகின்றன.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இரு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு திருப்பாச்சேத்தி, போகலுார் ஆகிய இரு இடங்களில் சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
நான்கு வழிச்சாலையில் பழுதாகும் வாகனங்களை கண்காணிக்கவும் விபத்து ஏற்படா வண்ணம் தற்காலிக எச்சரிக்கை பலகை வைக்கவும் சுங்கச்சாவடி சார்பில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் உள்ளது.
வாகனங்களில் பழுது ஏற்பட்டாலும் விபத்துகளில் விலங்குகள், பறவைகள் அடிபட்டு உயிரிழந்தாலும் உடனுக்குடன் விரைந்து வந்து அப்புறப்படுத்துவது வழக்கம்.
கடந்த ஒரு வருடமாக சுங்கச்சாவடி ரோந்து வாகனம் பயன்பாட்டிலேயே இல்லை. விபத்து ஏற்பட்டாலும் வருவதில்லை.
நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் பழுதாகி நின்றாலும் கண்டு கொள்வதில்லை. மணலூர் அருகே சரக்கு ஏற்றி வந்த வாகனம் மேம்பாலம் நுழையும் இடத்தில் நீண்ட நேரம் பழுதாகி நின்றது. பழுதாகி நின்ற வாகனத்தின் அருகே எந்த வித எச்சரிக்கை பலகையும் இல்லை.
கழுகேர்கடை விலக்கு அருகே வாகனத்தில் அடிபட்டு நாய் ஒன்று உயிரிழந்தது மூன்று நாட்களாகியும் அப்புறப்படுத்ததால் துர்நாற்றத்தால் நான்கு வழிச்சாலையில் செல்லவே முடியவில்லை. அடிக்கடி விலங்குகள் பலியாவதும், அதனை அப்புறப்படுத்தவும் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என வாகன ஓட்டுனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

