நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முனியசாமி 23., இவர் நண்பர்களுடன் பழநிக்கு பாதயாத்திரை சென்றார்.
நேற்று முன்தினம் இரவு தேவகோட்டை புறவழிச்சாலை வழியாக சடையன்காடு அருகே சென்றார்.இவருடன் வந்த நண்பர்கள் முன்னால் சென்று விட்டனர். அந்த பகுதி இருட்டாக இருந்ததால் அடையாளம் தெரியாத வாகனம் முனியசாமி மீது மோதியதில் தலையில் காயமடைந்து முனியசாமி உயிரிழந்தார்.

