/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சி செயலாளர் வீட்டில் 10 பவுன் நகை,பணம் திருட்டு
/
ஊராட்சி செயலாளர் வீட்டில் 10 பவுன் நகை,பணம் திருட்டு
ஊராட்சி செயலாளர் வீட்டில் 10 பவுன் நகை,பணம் திருட்டு
ஊராட்சி செயலாளர் வீட்டில் 10 பவுன் நகை,பணம் திருட்டு
ADDED : ஜன 19, 2024 05:00 AM
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அருகே சூராணத்தில் ஊராட்சி செயலாளரின் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலைக்கிராமம் அருகே உள்ள சாத்தனூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக சந்திரகாந்த் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சந்திரகாந்த் குடும்பத்துடன் அவரது மனைவி ஊரான நானாமடை கிராமத்திற்கு சென்று விட்டு நேற்று காலை சூராணம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 10பவுன் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.