/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆந்திராவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கஞ்சா கடத்திய இருவர் கைது
/
ஆந்திராவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கஞ்சா கடத்திய இருவர் கைது
ஆந்திராவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கஞ்சா கடத்திய இருவர் கைது
ஆந்திராவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கஞ்சா கடத்திய இருவர் கைது
ADDED : மார் 25, 2025 07:28 AM

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஒத்தக்கடை செக்போஸ்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆந்திராவில் இருந்து காரில் ராமேஸ்வரத்திற்கு கடத்திய 26 கிலோ கஞ்சா, காரை பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஒத்தக்கடை செக்போஸ்டில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா பதிவு எண் கொண்ட காரை மறித்து சோதனையிட்டனர். காருக்குள் இருந்த கேரள மாநிலம் திருச்சூர் அருகே வடுகாரப்பூர் சண்முகன் மகன் அருண் 30, தர்மராஜ் மகன் விவித் 33, ஆகியோரை விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பைகளை பரிசோதித்த போது 2 கிலோ எடை கொண்ட 13 பண்டல்களில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தி செல்வதாக தெரிவித்தனர். மேலும் அங்கிருந்து இலங்கைக்கு கடத்தயிருந்ததாகவும் தெரிவித்தனர். டி.எஸ்.பி., கவுதமி மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து 26 கிலோ கஞ்சா, கார், அலைபேசிகளையும் பறிமுதல் செய்தனர்.