/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வடமாடு மஞ்சுவிரட்டு : 21 காளைகள் பங்கேற்பு
/
வடமாடு மஞ்சுவிரட்டு : 21 காளைகள் பங்கேற்பு
ADDED : ஜன 21, 2024 03:29 AM
சிவகங்கை: நாட்டரசன் கோட்டையில் தை பொங்கலை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. 21 காளைகள் 189 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கிராமத்தில் தை பொங்கலை முன்னிட்டுஇரண்டாம் ஆண்டாக வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 21 காளைகள் இந்த மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டன.
ஒரு அணிக்கு 9 பேர் வீதம் 189 வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசும், கோப்பை மற்றும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் காளைகள் முட்டியதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியினை நாட்டரசன்கோட்டை, காளையார்கோயில், சிவகங்கை, கல்லல், மதகுபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

