ADDED : ஜன 21, 2024 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நகரத்தார் காவடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
குன்றக்குடியில் இருந்து பழநிக்கு பாரம்பரியமாக புறப்பட்ட நகரத்தார் காவடி நேற்று சிங்கம்புணரி வந்தது.
அங்கு சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
கோயில் நிர்வாகம், கிராமத்தார்கள் சார்பில் காவடிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட காவடிக்கு நான்கு ரோடு சந்திப்பில் வணிகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து புறப்பட்ட காவடி நத்தம், திண்டுக்கல் வழியாக ஜன. 24ம் தேதி பழநி சென்று ஜன.27ம் தேதி சிறப்பு அபிஷேகம் வழிபாட்டுடன் காவடி செலுத்தப்பட உள்ளது.

