/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொல்லங்குடியில் மஞ்சள் பை இயந்திரம்
/
கொல்லங்குடியில் மஞ்சள் பை இயந்திரம்
ADDED : ஜன 19, 2024 04:51 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடியில் ரூ.10க்கு மஞ்சள் பை வழங்கும் இயந்திரத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் செயல்படுகிறது.
இந்த இயந்திரத்தில் ரூ.10 மதிப்புள்ள நாணையங்களை செலுத்தினால், மஞ்சள் பை வரும். கடைகளுக்கு செல்வோர் இந்த பைகளை பயன்படுத்தி, பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுத்தி வருகிறது.
அடுத்த கட்டமாக நேற்று கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரத்தை, திறந்து வைத்து முதல் விற்பனையை கலெக்டர் துவக்கினார்.
அந்த பைகளை கொல்லங்குடி ஊராட்சி தலைவர் மெய்ஞான மூர்த்தி, ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் பழனிக்குமார், செயல் அலுவலர் நாராயணி பெற்றுக் கொண்டனர்.

