/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு
/
சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு
சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு
சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு
ADDED : ஜூலை 02, 2025 08:14 AM

சேதுபாவாசத்திரம் :சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் வந்தவர் சில மணிநேரத்தில் விபத்தில் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கவுதமன், 27; சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சொந்த ஊருக்கு வந்தார். இரண்டாம்புளிக்காடு பகுதியில் டீக்கடை நடத்தி வரும் தன் தந்தை ரவிசந்திரனை பார்க்க, வீட்டில் இருந்து டூ -- வீலரில் சென்றார்.
இரவு, 9:00 மணிக்கு சேதுபாவாசத்திரத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த லாரி கவுதமன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். நிற்காமல் சென்ற லாரியை அப்பகுதி இளைஞர்கள் 3 கி.மீ., துாரம் விரட்டி பிடித்து, சேதுபாவாசத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.
கவுதமனுக்கு திருமணமாகி சுபஸ்ரீ, 23, என்ற மனைவி உள்ளார். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்த சில மணி நேரத்திலேயே விபத்தில் கவுதமன் பலியான சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.