/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பெண்ணை மறுமணம் செய்வதாக ரூ.28 லட்சம், 14 சவரன் மோசடி
/
பெண்ணை மறுமணம் செய்வதாக ரூ.28 லட்சம், 14 சவரன் மோசடி
பெண்ணை மறுமணம் செய்வதாக ரூ.28 லட்சம், 14 சவரன் மோசடி
பெண்ணை மறுமணம் செய்வதாக ரூ.28 லட்சம், 14 சவரன் மோசடி
ADDED : ஜன 21, 2024 07:28 AM
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கைசேரியை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு திருமணமாகி, 4, 7 வயதில் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர், சில ஆண்டுக்கு முன் உடல்நல குறைவால் இறந்து விட்டார்.
அவர் இரண்டாவது திருமணத்திற்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார்.
கடந்த செப். 19ல், விழுப்புரம் மாவட்டம், சொக்கனந்தல் பகுதி சக்கரவர்த்தி, 34, என்ற பட்டதாரி வாலிபர் ஆன்லைனில் விளம்பரம் பார்த்ததாகவும், தான் ஷேர் மார்க்கெட் செய்து வருவதாகவும், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் அவரிடம் கூறியுள்ளார்.
தன் மனைவி விபத்தில் இறந்துவிட்டதாகவும், தன்னிடம் பணம் உள்ளதால், திருமணம் செய்யும் பெண்ணிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய பெண், தன் விபரங்களை சக்கரவர்த்தியிடம் கூறி பழகினார். பின், ஷேர் மார்க்கெட் தொழிலுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக சக்கரவர்த்தி பணம் கேட்டுள்ளார்.
அப்பெண், குழந்தைகள் பெயரில் இருந்த வைப்பு நிதி, 28 லட்சம் ரூபாய், 14 சவரன் நகை ஆகியவற்றை கொடுத்துள்ளார். அத்துடன் சக்கரவர்த்தி அப்பெண்ணுடன் உறவிலும் ஈடுபட்டுள்ளார்.
சில நாள் கழித்து சக்கரவர்த்தி வாட்ஸாப் காலில் மட்டுமே பெண்ணிடம் பேசியுள்ளார். திடீரென பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த பெண், டிசம்பரில் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். திருவிடைமருதுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்கரவர்த்தியை தேடினர்.
நேற்று முன்தினம் இரவு அவரை கைது செய்தனர்.
அவரிடம், 15 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

