/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ரயில் பயணியிடம் மொபைலை திருடிய இளைஞர் சிக்கினார்
/
ரயில் பயணியிடம் மொபைலை திருடிய இளைஞர் சிக்கினார்
ADDED : மார் 21, 2025 02:55 AM
தஞ்சாவூர்:ரயில்வே ஸ்டேஷனில், பயணியிடம் மொபைலை திருடிய இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை, ராயப்பேட்டை அங்கமுத்துநாயக்கன் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 54; தனியார் நிறுவன மேலாண்மை ஆலோசகர். இவர் கடந்த ஜனவரி 16ம் தேதி, சுவாமிமலை கோவிலுக்கு செல்ல, சென்னையில் இருந்து உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், கும்பகோணத்திற்கு வந்தார்.
பின், கும்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், உள்ள பயணியர் காத்திருப்போர் அறையில் உள்ள நாற்காலியில், தன் பேக்கை வைத்து விட்டு குளிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பேக்கில் இருந்த மொபைல்போன் திருடு போயிருந்தது.
கிருஷ்ணமூர்த்தி புகாரின்படி, கும்பகோணம் ரயில்வே போலீசார் விசாரித்தனர். அதில், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த இசக்கிதாஸ், 30, என்பவரை போலீசார், கரூர் பகுதியில் நேற்றுமுன்தினம் கைது செய்து, அவரிடம் இருந்த மொபைலை பறிமுதல் செய்தனர்.