/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18 ம் கால்வாய் வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
/
18 ம் கால்வாய் வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
18 ம் கால்வாய் வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
18 ம் கால்வாய் வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 23, 2024 05:06 AM
கம்பம்: 18 ம் கால்வாய் வாய்க்காலை தூர்வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்முகா நதி அணை 52.5 அடி கொள்ளளவு கொண்டதாகும். ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்ன ஒவுலாபுரம், எரசக்கநாயக்கனுார், கன்னிசேர்வைபட்டி, வெள்ளையம்மாள்புரம், ஒடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் அணை நிரம்பும். தொடர்ந்து அணை திறக்கப்படும் 1400 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுகிறது.
இந்த அணையிலிருந்து ஓடைப்பட்டி வரை செல்லும் 16 கி.மி. நீளமுள்ள வாய்க்கால் சமீபத்தில் தூர்வாரப்பட்டது. செடி,கொடிகள் வளர்ந்து புதராக இருந்தது அகற்றப்பட்டது.
ஆனால் 18 ம் கால்வாய் வாய்க்கால் நீண்ட காலமாக தூர் வாரப்படவில்லை.
சமீபத்தில் 18 ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட போது பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு செடி கொடிகள் வளர்ந்துள்ளது.
எனவே 18 ம் கால்வாய் வாய்க்காலை தூர் வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூரில் ஆரம்பித்து கம்பம், புதுப்பட்டி அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் என நீண்டு தற்போது போடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிற்கு குறிப்பிட்ட நாட்கள் என கணக்கிட்டு தண்ணீர் தரப்படுகிறது.
அந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்றால், வாய்க்கால் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே 18 ம் கால்வாய் வாய்க்காலை தூர்வார பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

