ADDED : ஜன 14, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் சுருளிப்பட்டி யானைக் கெஜம் ஒடை,திராட்சை தோட்டம் அருகில் உள்ள பழைய கிணற்றில் 7 வயதுள்ள கடமான் தவறி விழுந்து பலியானது.
மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின், வன உயிரினங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக மான்கள், காட்டு பன்றிகள், காட்டு மாடுகள், யானைகள் அதிகரித்துள்ளது. சுருளிப்பட்டி மலையடிவாரத்தில் யானை கெஜம் ஒடை ஆரம்பமாகும் இடத்தில் பழைய கிணற்றில் 7 வயது மதிக்கத்தக்க கடமான் தவறி விழுந்து பலியானது.
கிணற்றுக்குள் விழுந்து சில நாட்கள் ஆகியிருக்கும் என்று தெரிகிறது.
துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து, கம்பம் கிழக்கு ரேஞ்சர் பிச்சைமணி தலைமையிலான வனத்துறையினர், கிணற்றுக்குள் கிடந்த மானை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

