/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துணை மின் நிலைய அறையில் திடீர் விபத்தால் இரவில் தொடர் மின்தடை பொதுமக்கள் விடிய, விடிய அவதி

ADDED : ஜூன் 25, 2025 03:15 AM

தேனி : பழனிசெட்டிபட்டி துணை மின் நிலைய கட்டுப்பாட்டு அறையில் திடீரென மின் வழித்தட கம்பி விழுந்து 10 துணை மின் நிலைய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மின் வினியோகம் பாதித்து மாவட்ட மக்கள் அவதிப்பட்டனர்.
பழனிசெட்டிபட்டி துணை மின் நிலையத்தில் மின்சார பகிர்மான கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கு மினி கண்டக்டரில் என்ற கட்டுப்பாடு மின் சாதனத்தின் மீது லோயர்கேம்ப் -மதுரை வழித்தடத்தில் உள்ள உயர் மின் அழுத்த ஒயர்கள் நேற்றிரவு 11: 18 மணிக்கு திடீரென விழுந்து விபத்து நடந்தது. இதனால் வண்ணாத்திப்பாறை, கம்பம், தேவாரம், உத்தமபாளையம், சின்னஓவுலாபுரம், காமாட்சிபுரம்,கடமலைக்குண்டு, வீரபாண்டி, போடி, மார்க்கையன்கோட்டை உட்பட 10 துணை மின் நிலைங்களுக்கு செல்லும் பின் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
நள்ளிரவில் மின்சாரம் இன்றி மக்கள் பேன், ஏ.சி., பயன்படுத்த முடியாமல் தவித்து, கொசுக்கடியில் அவதியுற்றனர்.சம்பவ இடத்திற்கு செயற்பொறியாளர் சோலைராஜன், தேனி மேற்பார்வைப் பொறியாளர் லட்சுமி நேரில் சென்றுஆய்வு செய்தனர். பின் அதிகாலை வரை சீரமைப்புப் பணி நடந்தன. நேற்று அதிகாலை 2:00 மணி முதல் அனைத்து துணை மின் நிலையங்களிலும் வினியோகம் சீரமைக்கப்பட்டன.
மேற்பார்வை பொறியாளர் லட்சுமி கூறியதாவது: திடீரென ஏற்பட்ட மின்தடையால் 10 துணை மின் நிலையங்களில் வினியோகம் பாதித்தது. சீரமைப்பணிகள் முடிந்த பின் படிப்படியாக மின் வினியோகம் சீரானது.
தீவிர கண்காணிப்பில் ஈடுபட செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது., என்றார்.