/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொது மக்கள் புகார் மீது கூடுதல் கவனம் தேனி எஸ்.பி., சிவ பிரசாத் தகவல்
/
பொது மக்கள் புகார் மீது கூடுதல் கவனம் தேனி எஸ்.பி., சிவ பிரசாத் தகவல்
பொது மக்கள் புகார் மீது கூடுதல் கவனம் தேனி எஸ்.பி., சிவ பிரசாத் தகவல்
பொது மக்கள் புகார் மீது கூடுதல் கவனம் தேனி எஸ்.பி., சிவ பிரசாத் தகவல்
ADDED : ஜன 14, 2024 04:16 AM

தேனி, : பொதுமக்கள் வழங்கும் மனுக்கள், புகார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற தேனி எஸ்.பி., ஆர். சிவபிரசாத் கூறினார்.
நேற்று தேனி எஸ்.பி.,யாக சிவபிரசாத் பொறுப்பேற்றார். இவர் மதுரை எஸ்.பி.,யாக பணிபுரிந்து தேனிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். தேனி எஸ்.பி.,யாக பணியாற்றிய பிரவீன் உமேஷ் டோங்கரே மதுரை எஸ்.பி.,யாக பணி மாறுதலில் சென்றார்.
புதிய எஸ்.பி., சிவபிரசாத் கர்நாடகா, பெங்களுரூவை சேர்ந்தவர். 2016ல் ஐ.பி.எஸ்., தேர்வு முடித்து விருதுநகர் ஏ.எஸ்.பி.,யாக பணியை துவங்கினார். பின்னர் மதுரை, சென்னை வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர் ஆகிய இடங்கில் நகர துணை கமிஷனராக பணியாற்றினார். 2022 ஜூன் முதல் மதுரை எஸ்.பி.,யாக பொறுப்பு வகித்தார். இந்நிலையில் நேற்று தேனி எஸ்.பி., யாக பொறுப்பேற்றார்.பொறுப்பேற்றபின் நிருபர்களிடம் கூறுகையில், போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள்,புகார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகள் கேட்கப்படும். போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் சிறப்பாக நடக்க வழிமுறைகள் பின்பற்றப்படும். வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அதிக கவனம் செலுத்தப்படும். என்றார்.

