/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் நீக்கம்
/
அ.தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் நீக்கம்
ADDED : ஜூன் 15, 2025 06:45 AM
தேனி : பெரியகுளம் தென்கரை புதுத்தெரு பத்மினி 47. தேனி அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட மகளிரணி இணைச்செயலாளராக இருந்தார். சென்னையில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன் பண மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதே போல் பெரியகுளம் தென்கரை மீனாட்சி படித்துறை தெரு முருகேஸ்வரி 42.
கிழக்கு மாவட்ட மகளிரணி துணைச்செயலராக இருந்தார். இவரது உறவினர் தங்கபாண்டியன் வீட்டில் தங்கி கஞ்சா விற்பனை செய்தார். தங்கபாண்டி, முருகேஸ்வரி, மகன் பாலகணபதி ஆகிய மூவரையும் கஞ்சா விற்றதாக எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மகளிரணி நிர்வாகிகள் பத்மினி, முருகேஸ்வரி இருவரும் கட்சியின் கோட்பாட்டிற்கு முரணாக செயல்பட்டதாக கூறி பொதுச்செயலாளர் பழனிசாமி நீக்கினார்.