/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் தடை செய்த புகையிலை போதைபாக்கு விற்பனை அதிகரிப்பு
/
கம்பத்தில் தடை செய்த புகையிலை போதைபாக்கு விற்பனை அதிகரிப்பு
கம்பத்தில் தடை செய்த புகையிலை போதைபாக்கு விற்பனை அதிகரிப்பு
கம்பத்தில் தடை செய்த புகையிலை போதைபாக்கு விற்பனை அதிகரிப்பு
ADDED : ஜன 21, 2024 05:10 AM
கம்பம்: கள்ளச்சாராயம், கஞ்சாவிற்கு இணையாக லாபம் கிடைப்பதால், கம்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பாக்குகள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது.
உணவு பாதுகாப்பு துறையினர் அவ்வப்போது ரெய்டு நடத்தினாலும், அபராதத்தை கட்டி விட்டு, மறுநாளே விற்பனையை துவக்கி விடுகின்றனர். பள்ளிகளுக்கு அருகில் இது போன்ற விற்பனைகள் அதிகரித்திருப்பது கவலை தரும் விஷயமாகும்.
கம்பம் மட்டுமின்றி உத்தமபாளையம், சின்னமனூர் கோம்பை, பண்ணைப்புரம், மார்க் கையன்கோட்டை, குச்சனூர், ஒடைப்பட்டி,காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி என விற்பனை அதிகரிக்கும் பட்டியல் நீள்கிறது.
உணவு பாதுகாப்பு துறையினரை நம்பி பயன் இல்லை. போலீசார் களத்தில் குதிக்க வேண்டும். முதலில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளை கண்காணிக்க வேண்டும். உண்மையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கும் கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.