ADDED : ஜன 24, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. கட்டுரை எழுதுதல், பேச்சுப்போட்டி, ஒவியப்போட்டி நடந்தது. இதில் 6,7,8 மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், உயர்நிலை, மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளை மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஒருங்கிணைத்தார்.

