/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏறுமுகத்தில் வெற்றிலை விலை முகூர்த்த நாட்களால் கிராக்கி
/
ஏறுமுகத்தில் வெற்றிலை விலை முகூர்த்த நாட்களால் கிராக்கி
ஏறுமுகத்தில் வெற்றிலை விலை முகூர்த்த நாட்களால் கிராக்கி
ஏறுமுகத்தில் வெற்றிலை விலை முகூர்த்த நாட்களால் கிராக்கி
ADDED : பிப் 24, 2024 05:14 AM
கம்பம்,: முகூர்த்த நாட்கள், கோயில் திருவிழாக்கள் நடப்பதால் வெற்றிலை விலை உயரத் துவங்கியுள்ளது.
வெற்றிலை மங்களகரமானதும்,மருத்துவகுணம் கொண்டது. அனைத்து விசேசங்களிலும் முன்னிலை வகிக்கிறது தேனி மாவட்டத்தில், கம்பம், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பல ஊர்களில் சாகுபடியாகிறது.
சின்னமனூர், பெரியகுளம் வட்டாரங்களில் வெள்ளை மற்றும் கருப்பு வெற்றிலை பிரதானமாக சாகுபடியாகிறது.
தற்போது கறுப்பு வெற்றிலை விலை கிலோ ரூ. 180 ஆக உள்ளது. வெள்ளை வெற்றிலை ரூ.260 ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் திடம் சக்கை, திடம் மாரு ரகங்கள் வரத்து குறைந்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் சைடு பிரி (கறுப்பு) மற்றும் திடம் சக்கை, திடம் மாரு தட்டுப்பாடாக உள்ளது. வரத்தும் இல்லை. வெற்றிலை பெரிய சைஸ் ஆக இருக்கும்.
வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் சைடு பிரி, திடம் சக்கை, திடம் மாரு ரகங்கள் விலைரூ.240 வரை சென்றுள்ளது.
இது தொடர்பாக சின்னமனூர் வெற்றிலை சாகுபடியாளர் ரவி கூறுகையில், கோயில் திருவிழாக்கள், முகூர்த்த காலமாகஇருப்பதால் விலை உயர்ந்து வருகிறது. வரத்து குறைவால் டில்லி, மகாராஷ்டிரா, ஆக்ரா போன்ற ஊர்களுக்கு அனுப்ப முடியவில்லை, என்றார்.

