/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருதரப்பு மோதல்: போலீசார் குவிப்பு
/
இருதரப்பு மோதல்: போலீசார் குவிப்பு
ADDED : ஜன 19, 2024 05:51 AM
தேனி: தேனி அருகே சுக்குவாடன்பட்டியில் நடந்த இருதரப்பு தகராறில் மோதலை தவிர்க்க 3 இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சுக்குவாடன்பட்டி வடக்குத்தெரு லோகேஸ்வரன் 20. இவர் தனது கன்றுக்குட்டி காணாமல் போனதால் அதனை தேடி ஜனவரி 17 ல் இந்திரா காலனியில் தேடிச் சென்றார்.
அங்கு இருந்த ராஜதுரை, அலெக்ஸ், காளிமுத்து, மங்காண்டி, முருகேசன், வைரமுத்து, மாரியப்பன், அஜீத், வீரன், தீபக், பாலா மற்றும் சிலர், எங்கள் பகுதியில் கன்றுக்குட்டியை ஏன் தேடி வந்தாய் என திட்டி தாக்கினர்.
இதில் மாரியப்பன் இரும்பு கம்பியை எடுத்து லோகேஸ்வரன் தலையில் தாக்கி காயப்படுத்தி, டூவீலரை சேதப்படுத்தினார். லோகேஸ்வரன் தேனி மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் உள்ளார். புகாரில் அல்லிநகரம் போலீசார் சுக்குவாடன்பட்டியை சேர்ந்த ராஜதுரை, அலெக்ஸ், காளிமுத்து, மங்காண்டி, முருகேசன், வைரமுத்து, மாரியப்பன், அஜீத், வீரன், தீபக், பாலா உட்பட பலர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட லோகேஸ்வரன் தரப்பினர், எதிரிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அதற்கு முன் ஏ.டி.எஸ்.பி.,சுகுமாறன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப் பிரச்னையால் பதட்டம் நிலவுவதால் சுக்குவாடன்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

