ADDED : ஜன 21, 2024 05:26 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் பூத்துக் குலுங்கும் மா மரங்களால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில், தெப்பம்பட்டி, வேலப்பர் கோயில், பாலக்கோம்பை, ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், வைகை அணை உட்பட பல பகுதிகளில் மா மரங்கள் உள்ளன. கல்லாமை, காசா, செந்தூரம் வகை மரங்கள் அதிகம் உள்ளன. இப் பகுதியில் விளையும் மாங்காய் கேரளா பகுதிக்கு அதிகம் விற்பனைக்கு செல்கிறது. கடந்த சில மாதங்களில் பெய்த மழை மாமரங்களின் வளர்ச்சிக்கும், காய்ப்புக்கும் ஏற்றதாக உள்ளது. தற்போது மா மரங்களில் பூக்கள் அதிகம் எடுத்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது: சில வாரங்களில் காய்த்து உதிரும் பிஞ்சு காய்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். தொடர்ந்து கிடைக்கும் முதிர்ந்த காய்கள் மூட்டமிட்ட சில நாட்களில் பழமாகி கூடுதல் விலை கிடைக்கும். மாமரங்களில் காய்ப்பு காலத்தில் மழை, காற்று ஏற்பட்டால் விளைச்சல் பாதிப்பு ஏற்படும். இவ்வாறுதெரிவித்தனர்.

