/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜன 23, 2024 05:10 AM
தேனி: பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க மாநில அளவு துணைநீர் மேலாண்மை பணிகள் என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் வேளாண், தோட்டக்கலைப்பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம்.
விவசாயிகளுக்கு மின், டீசல் மோட்டார் வாங்க ரூ.25ஆயிரம், நீர் தேக்கும் தொட்டி அமைத்திட ரூ.40ஆயிரம், நீர் கடத்தும் குழாய்கள் பொருத்திட ரூ.10ஆயிரம், நிலத்தடி நீர் மட்டம் பாதுகாப்பான பிர்காகளில் குழாய் கிணறு அமைக்க ரூ.25ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் எம்.ஐ.எம்.ஐ.எஸ்., இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது சிட்டா, அடங்கல், ஆதார்நகல், சிறு,குறு விவசாயி சான்று, புகைப்படம் ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தினை அணுகுமாறு தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா தெரிவித்துள்ளார்.

