/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இலவச சுற்றுலா என கூறி ரூ.4.40 லட்சம் மோசடி; கோவை தம்பதி மீது வழக்கு

ADDED : மே 29, 2025 12:41 AM
தேனி : தேனி மாவட்டம், போடி சூர்யாநகர் ரவிச்சந்திரன். இவரது மனைவி டாக்டர் நளினி. மருத்துவமனை வைத்துள்ளனர். இவர்களை தேனியில் உள்ள ஓட்டலில் கோவை காந்திபுரம் மதுசூதனன், அவரது மனைவி யோகலட்சுமி சந்தித்தனர். இவர்கள் தங்களது சுற்றுலா நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்தால், வெளிநாட்டிற்கு இலவச சுற்றுலா செல்லலாம் என கூறினர். நளினி, அவரது கணவர் இணைந்து ரூ.4.40 லட்சத்தை வழங்கினர்.
பணத்தை பெற்றுக்கொண்டு, சுற்றுலா அழைத்து செல்லாமலும், பணத்தை தராமலும் கோவை தம்பதி ஏமாற்றினர். நளினி அலைபேசியில் மது சூதனனை தொடர்பு கொண்டு பணத்தை கேட்ட போது திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். எஸ்.பி., சிவபிரசாத்திடம் நளினி புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் தேனி போலீசார் மதுசூதனன், யோகலட்சுமி மீது வழக்கு பதிந்தனர்.