/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாய் கரையில் மது பாட்டில்களை அகற்றிய சிறுவர்கள் -திருந்துவார்களா குடிமகன்கள்

ADDED : ஜன 19, 2024 05:44 AM

கூடலுார்: கூடலுார் 18ம் கால்வாய் கரையில் ஆங்காங்கே கிடந்த காலி மதுபாட்டில்களை அகற்றும் பணியில் சோலைக்குள் அமைப்பைச் சேர்ந்த சிறுவர்கள் ஈடுபட்டனர்.
கூடலுார் சோலைக்குள் கூடல் அமைப்பு சார்பில் 18ம் கால்வாய் கரையில் பல வாரங்களாக தொடர்ந்து மரக்கன்றுகளை நடுவதும் அதனை பராமரிப்பதுமாக உள்ளனர்.
மரக்கன்றுகளை பாதுகாப்பதற்காக சுற்றிலும் பிளாஸ்டிக் பைகளை கட்டியுள்ளனர். தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கரைப் பகுதியில் அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்கள் மரக்கன்றுகளை சேதப்படுத்துவதுடன் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை அகற்றி அதில் அமர்ந்து மதுகுடிக்க பயன்படுத்துகின்றனர்.
இறுதியாக மது பாட்டில்களை ஆங்காங்கே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இது தொடர்பாக எவ்வித தடுப்பு நடவடிக்கையும் இல்லை. 18ம் கால்வாய் தண்ணீரில் குப்பையுடன் சேர்ந்து காலி மது பாட்டில்கள் மிதப்பதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சோலைக்குள் கூடல் அமைப்பைச் சேர்ந்த சிறுவர்கள் கரைப்பகுதியில் ஆங்காங்கே கிடந்த மது பாட்டில்களை அகற்றினர்.
இதைப் பார்த்தாவது குடிமகன்கள் திருந்துவார்களா என அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.