/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவ மூலிகை ‛சித்தரத்தை சாகுபடியை ஊக்குவிக்க முடிவு; தோட்டக்கலைத்துறை மூலம் நிலங்கள் தேர்வு

ADDED : ஜன 27, 2024 04:31 AM
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் மூலிகைப் பயிரான சித்தரத்தை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இப்பயிர் சாகுபடி குறைந்து விட்டது. மாவட்டத்தில் சித்த மருத்துவ பயன்பாட்டிற்கும், நுரையீரல் பாதிப்பை குணப்படுத்தும் சித்தரத்தை' யை மூலிகை சாகுபடியை ஊக்குவிக்க அதற்குரிய ஆய்வுகள் செய்ய வேண்டும். பெரியகுளம் அரசு தோட்டககலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மூலம் விளைநிலங்களை கண்டறிந்து விவசாயிகள் மூலிகை சாகுபடி செய்து பயன் பெற மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா, மருத்துவ மூலிகை பயிரான சித்தரத்தை'யில் ஆன்டிபயாடிக்' மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால் இதனை ஆய்வு செய்து, சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு சோதனை முறையில் சாகுபடி முறைகளை கற்பிக்கவும், இம் மூலிகை சாகுபடிக்கான நிலங்களை கண்டறிய தோட்டக்கலைத்துறையினருக்கு அறிவுறுத்தி இருந்தார். இதனை ஏற்ற தோட்டக்கலைத்துறையினர் 2025ல் சாகுபடி பணிகளை துவக்குவதற்காக பெரியகுளம் தோட்டக்கலை ஆராயச்சி நிலையத்துடன் இணைந்து, சித்தரத்தை மூலிகைப் பயிர் சாகுபடிக்கான விளைநிலங்களை கண்டறியும் பணிகளை துவக்கி உள்ளது. மேலும் இதில் மூலிகை சாகுபடியில் விருப்பம் உள்ள விவசாயிகள் நேரடியாக தேனி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விபரங்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.