/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
9 பேரூராட்சிகளில் 'அம்ரூத்' திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க முடிவு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தகவல்
/
9 பேரூராட்சிகளில் 'அம்ரூத்' திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க முடிவு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தகவல்
9 பேரூராட்சிகளில் 'அம்ரூத்' திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க முடிவு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தகவல்
9 பேரூராட்சிகளில் 'அம்ரூத்' திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க முடிவு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தகவல்
ADDED : ஜன 19, 2024 05:48 AM

தேனி: 'மாவட்டத்தில் 'அம்ரூத் 2.0' திட்டத்தில் 9 பேரூராட்சிகளில் ரூ.161.08 கோடி செலவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது', என தேனி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணி தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தில் 12 தேர்வுநிலை பேரூராட்சிகள், 7 முதல்நிலை பேரூராட்சிகள், 3 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் என 22 பேரூராட்சிகள் உள்ளன. நகரங்களுக்கு இணையாக பல பேரூராட்சிகளில் மக்கள் தொகையும், வளர்ந்து வரும் நகரங்களாக உள்ளன.
இப் பேரூராட்சிகளில் ஆன்மிக தலங்களாக வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயில்கள் அமைத்திருப்பது சிறப்பாகும். பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது:
பேரூராட்சிகளில் துாய்மைப்பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதா.
பேரூராட்சி பகுதியில் உள்ள சுயஉதவிக்குழுவினர் மூலம் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்களுக்கு தற்போது தினமும் ரூ.609 சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லை.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா
அனைத்து பேரூராட்சிகளிலும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அதிலும் ஆண்டிப்பட்டி, வீரபாண்டி, தேவதானப்பட்டி, உத்தமபாளையம், பழனிசெட்டிபட்டி, காமயகவுன்டன்பட்டி, வடுகபட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகளில் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.இதில் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் தினமும் 3.5 டன் காய்கறி,மக்கும் கழிவுகள், 4.5 டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத கழிவுகள் என மொத்தம் 7.5 டன் குப்பைகளுக்கு மேல் சேகரிக்கப்படுகிறது.
இதில் மக்ககும் குப்பைகள் 1.35 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உரமாக்கும் மையம் மூலம் உரமாக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சிக்காக தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. குப்பையில் இருந்து பிரிக்கப்படும் அட்டை, பேப்பர் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறதா
இத்திட்டம் பற்றியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தியும் பேரூராட்சி நிர்வாகங்கள் மூலம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
பொதுமக்கள் அதிகம் குப்பையை பிரித்து வழங்கும் பகுதியை 'ஸ்மார்ட் வார்டு' என அறிவித்து செயல்படுத்துகின்றோம். ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகளில் 'ஸ்மார்ட் வார்டுகள்' அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் குப்பையை பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு பேரூராட்சி சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறது. ஆண்டிப்பட்டியில் 9பேர், உத்தமபாளையத்தில் 12 பேர் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கின்றனர்.
பேரூராட்சி செயல் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளதே
ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி, கோம்பை, வீரபாண்டி, தேவாரம் ஆகிய 5 பேரூராட்சிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த பேரூராட்சிகள் கூடுதல் பொறுப்பாக செயல் அலுவலர்கள் நியமித்து வளர்ச்சி பணிகள் பாதிக்காதவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அம்ரூத் 2.0 திட்டத்தில் செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி
இத்திட்டத்தில் உத்தமபாளையம், அனுமந்தம்பட்டி, ஆண்டிப்பட்டி, காமயகவுன்டன்பட்டி, புதுப்பட்டி, மேலசொக்கநாதபுரம், தென்கரை, வடுகபட்டி, ஒடைப்பட்டி ஆகிய 9 பேரூராட்சிகளில் ரூ.161.08 கோடியில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் குறிப்பிட்டுள்ள பேரூராட்சி பகுதிக்குள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
கோம்பை, புதுப்பட்டி, தென்கரை, தேவாரம், உத்தமபாளையம், வீரபாண்டி, காமயகவுன்டன்பட்டி, பழனிசெட்டிபட்டி, பண்ணைபுரம் உள்ளிட்ட 11 பேரூராட்சிகளில் ரூ. 2.64 கோடியில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குச்சனுார், மேலச்சொக்கநாதபுரம்,வடுகபட்டி, ஓடைப்பட்டி, மார்க்கையன் கோட்டை, பூதிப்புரம் ஆகிய 6 பேரூராட்சிகளில் உள்ள நீர் நிலைகள் ரூ.2.46கோடியில் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது.
ஆன்மிக தலமாக விளங்கும் பேரூ ராட்சிகளின் மேம் பாட்டிற்கு சிறப்பு திட்டம் உள்ளதா
வீரபாண்டி, குச்சனுார் பேரூராட்சிகளில் சுற்றுலா துறை சார்பில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த உள்ளனர்.
100 சதவீத வரிவசூலிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைபொதுமக்களிடம் வரி செலுத்த தொடர் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டத்தில் போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம் பேரூராட்சிகளில் 100 சதவீதம் வரிவசூல் செய்யப்பட்டு விட்டது. மற்ற பேரூராட்சிகளிலும் வரிவசூல் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.
பல பேரூராட்சிகளில் குடிநீர் பிரச்னை உள்ளதே
குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி முதலில் 9 பேரூராட்சிகளில் நடக்கிறது. பிறகு அனைத்து பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்படும்.
எல்.இ.டி., விளக்குகள் மாற்றும் திட்டம் பல மாதங்களாக நிலுவையில் உள்ளதேமாவட்டத்தில் 18 பேரூராட்சிகளில் ரூ. 407.52 லட்சம் செலவில் 7236 தெருவிளக்குகள் மாற்றும் பணி நடந்து வருகிறது. தெருவிளக்குகள் பேரூராட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விளக்குகள் பரிசோதித்து பொருத்தும் பணி நடைபெறும் என்றார்.

