Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சந்தன மர எண்ணிக்கை குறைவு வனத்துறை 30,620 மரக்கன்றுகள் நடவு

சந்தன மர எண்ணிக்கை குறைவு வனத்துறை 30,620 மரக்கன்றுகள் நடவு

சந்தன மர எண்ணிக்கை குறைவு வனத்துறை 30,620 மரக்கன்றுகள் நடவு


ADDED : நவ 10, 2024 06:16 AM

Follow on Google

ADDED : நவ 10, 2024 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு: மறையூரில் சந்தன மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால், அதனை சரி செய்ய 30,620 சந்தன மரக்கன்றுகளை நட்டு வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் தமிழக எல்லையோரம் உள்ள மறையூர், காந்தலூர் ஆகிய ஊராட்களில் 119 சதுர கி.மீ., சுற்றளவில் சந்தன மரங்கள் ஆயிர கணக்கில் உள்ளன. 2004ம் ஆண்டுக்கு முன்பு வரை சந்தன காடுகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமாகவும், தனியார் நிலங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் சந்தன மரங்கள் இருந்தன. அவை கால போக்கில் வெட்டி கடத்தப்பட்டன. மறையூரில் சந்தன டிவிஷன் அமைக்கப்பட்ட பிறகு கடத்தல் குறைந்தது. தற்போது 30 செ.மீ., சுற்றளவை கொண்ட 60 ஆயிரம் மரங்கள் சந்தன காடுகளில் உள்ள நிலையில் தனியார் நிலங்களில் 90 சதவிகிதம் மரங்கள் மாயமாகின.

இந்நிலையில் சந்தன மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் சந்தன மரக்கன்றுகளை நட வனத்துறையினர் முன் வந்தனர். அதன்படி நாச்சிவயல் சந்தன காட்டில் மஞ்சப்பட்டி பகுதியில் சோதனை அடிப்படையில் 4500 கன்றுகள் நடப்பட்டன. அவை நன்றாக வளர்ந்ததால், கடந்த நான்கு ஆண்டுகளில் கோழிப்பண்ணை, நாச்சிவயல் கல்யாண மண்டபம், குப்பன் ஓடை, அக்கரை சீமை ஆகிய பகுதிகளில் 26,120 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நாச்சிவயல் வனம் பாதுகாப்பு குழு தலைமையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap