/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிறம் மாறிய சோளக்கதிர்:விவசாயிகள் கவலை
/
நிறம் மாறிய சோளக்கதிர்:விவசாயிகள் கவலை
ADDED : ஜன 21, 2024 05:12 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் மானவரி நிலங்களில் விளைந்த சோளக்கதிர்கள் கருத்துப்போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே ஆசாரிபட்டி, ரோசனப்பட்டி, முத்துசங்கிலிபட்டி, நல்லமுடிபட்டி, எம்.சுப்பலாபுரம், பந்துவார்பட்டி உட்பட பல கிராமங்களில் மானாவாரி விவசாயிகள் பல ஏக்கரில் சோளம் சாகுபடி செய்துள்ளனர். கடந்த செப்., அக்., பெய்த மழையை பயன்படுத்தி விதைத்த சோளம் முளைத்து கதிர் பிடித்த நிலையில் வளர்ந்திருந்தது. ஓரிரு வாரத்தில் அறுவடை செய்யலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். சோளக்கதிர்கள் வளர்ந்த நிலையில் ஆண்டிபட்டியில் பெய்த பலத்த மழையால் பாதிப்பு ஏற்பட்டது. மழைக்குப் பின் சில நாட்கள் வெயிலின் தாக்கமும் இல்லை. இதனால் சோளக்கதிர்கள் அனைத்தும் தொடர்ந்து இருந்த ஈரத்தால் கருத்து விட்டன. கருத்த கதிர்களை அறுவடை செய்தாலும் பயனில்லை. கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்த அப்படியே விட்டுள்ளனர்.
மானாவாரி நிலங்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் இந்த ஆண்டு பலன் இல்லையே என்ற கவலையில் ஆண்டிபட்டி பகுதி விவசாயிகள் உள்ளனர்.

