/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வழக்கறிஞர் பணி வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி தி.மு.க., முன்னாள் நிர்வாகி கைது

ADDED : ஜன 14, 2024 12:11 AM

தேனி:அரசு வழக்கறிஞர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த தி.மு.க., முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் நாகேந்திரன், மகன் சீராளனை தேனி குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை மேலகுயில்குடியில் வசிப்பவர் நாகேந்திரன் 59. இவர் தேனியில் வசித்தபோது தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளராக பதவி வகித்தார். இவர் தொடர்புடைய காசோலை வழக்கை உத்தமபாளையம் வழக்கறிஞர் செந்தில்குமார் நடத்தினார். அவரிடம் அரசு வழக்கறிஞர் பணி வாங்கி தருவதாக நாகேந்திரன் கூறினார். செந்தில்குமார் ரூ. 3 லட்சம் நாகேந்திரனிடமும், அலைபேசி செயலி மூலம் ரூ. 6 லட்சத்தை அவரது மகன்கள் சீராளன் 24, சித்தார்த், இவரது டிரைவர் முத்துச்செல்வன், பழனிசெட்டிபட்டி ஜெயராமன் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். இவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர் பணி வாங்கி தராமல் மோசடி செய்ததாக செந்தில்குமார் தேனி எஸ்.பி.யிடம் 2023 ஜனவரியில் புகார் அளித்தார்.
இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நாகேந்திரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த நாகேந்திரன், மகன் சீராளனை சென்னை சேப்பாக்கத்தில் கைது செய்தனர்.