/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை உத்தமபாளையத்தில் பொதுமக்கள் அவதி
/
உத்தமபாளையத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை உத்தமபாளையத்தில் பொதுமக்கள் அவதி
உத்தமபாளையத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை உத்தமபாளையத்தில் பொதுமக்கள் அவதி
உத்தமபாளையத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை உத்தமபாளையத்தில் பொதுமக்கள் அவதி
ADDED : ஜன 19, 2024 05:41 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பேரூராட்சியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில், தாலுகா தலைமையிடமாகவும், ஆர்.டி.ஒ. அலுவலகம் உள்ள பேரூராட்சியாகவும் உத்தமபாளையம் உள்ளது. நாளுக்கு நாள் விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது. மின் நகர், தண்ணீர்தொட்டி நெரு, தென்றல் நகர், அப்துல்கலாம் நகர், இந்திரா காலணி, தாமஸ் காலனி என விரிவாக்க பகுதிகளின் அதிகரித்துக் கொண்டே போகிறது.
முல்லைப் பெரியாறு ஊருக்கு நடுவில் ஒடுகிறது. ஆனால் குடிநீர் சப்ளையில் சுணக்கம் காட்டப்படுகிறது. லோயர்கேம்பிலிருந்தும், உள்ளூரிலும் பம்பிங் செய்து விநியோகிக்கின்றனர். ஆனால் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்க முடியாத பிரச்னையாக மாறி வருகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து பகிர்மான குழாய், மேல்நிலைத் தொட்டி கட்டியுள்ளனர்.
ஆனால் விநியோகம் என்பது 10 நாட்களிலிருந்து 15 நாட்கள் வரை ஆகிறது. அருகில் உள்ள கம்பம், சின்னமனூர் நகராட்சிகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்கின்றனர். ஆனால் உத்தமபாளையம் பேரூராட்சியில் நிலைமை தலைகீழாக உள்ளது.
குடிதண்ணீரை சேமித்து வைக்காதீர்கள் என்று சுகாதார துறை வீடு வீடாக வந்து பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் பேரூராட்சியோ 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஒரு முறை குடிநீர் சப்ளை செய்வதால் சேமிக்காமல் எப்படி இருக்க முடியும். எப்போது குடிநீர் வரும் என்பது தெரியாது. புதூர் போன்ற ஊரக பகுதிகளில் நிலைமை இன்னமும் மோசமாக உள்ளது. எனவே குடிநீர் சப்ளையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

