/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அதிகாரிகள் மவுனத்தால் அவதி; ரேஷன் கடைகளில் கரும்புகள் வீண் ரூ.24க்கு விற்க முடியாமல் விற்பனையாளர் தவிப்பு

ADDED : ஜன 21, 2024 07:22 AM

தேனி : பொங்கல் தொகுப்பு பெறாதவர்களுக்கு வழங்க வேண்டிய செங்கரும்புகளை ரேஷன் கடை பணியாளர்கள் தலா ரூ.24க்கு விற்பனை செய்ய கூட்டுறவு துறை அதிகாரிகள் வற்புறுத்துவதால் கடைகளில் தேங்கி வீணாகிறது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்கள் 2.19 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு செங்கரும்பு, ரூ.ஆயிரம் ஜன. 10 முதல் ஜன.14 வரை 85 சதவீதம் வழங்கப்பட்டன.
இதில் கை ரேகை பதிவு ஆகாத முதியோர், வெளியூர் சென்று திரும்பியோர் என 15 சதவீதம் பேர் பெற இயலவில்லை. இந்நிலையில் அதனை பெறாதவர்களுக்கு வழங்க வேண்டிய பணம் கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைக்கப்பட்டது. அரிசி, சர்க்கரையை மாதந்திர இருப்பில் சேர்த்ததில் வழங்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் செங்கரும்புகளை தலா ரூ.24க்கு விற்பனை செய்து அந்த பணத்தை கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைக்க ரேஷன் கடை பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
செங்கரும்பை ரூ.24க்கு வாங்க பொதுமக்கள் தயாரில்லை.மேலும் இவை கடைகளுக்கு வந்து ஒருவாரத்திற்கு மேல் ஆனதால் காய்ந்து விட்டன. சில இடங்களில் பணியாளர்கள் விற்க இயலாது என கூட்டுறவு சங்கங்களில் திரும்ப கொடுத்து விட்டனர்.
ரேஷன்கடை பணியாளர் சங்க தலைவர் ஜெயசந்திரராஜா கூறுகையில், கடைகளில் உள்ள செங்கரும்புகள் பற்றி அதிகாரிகள் தெளிவான வழிகாட்ட வேண்டும். இவற்றை விற்பனை செய்ய இயலாத நிலை உள்ளதால் பணியாளர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் பொங்கல் தொகுப்பு வழங்கியதில் பணியாளர்கள் தலா ரூ.4ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளனர். அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.