/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி
/
தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி
ADDED : ஜன 10, 2024 12:46 AM
தேனி : லோக்சபா தேர்தலில் ஓட்டுரிமை உள்ள அனைவரும் ஓட்டளிக்க வலியுறுத்தி மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரங்கோலி போட்டி மகளிர் திட்டம் சார்பில் நடத்தப்படுகிறது.
லோக்சபா தேர்தல் ஏப்., மே யில் நடத்த தேர்தல் ஆணையம் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளும் தீவிரமடைய துவங்கி உள்ளன. தேனி நகராட்சி அலுவலகத்தில் லோக்சபா தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் ரங்கோலி வரையப்பட்டிருந்தது.
மகளிர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'லோக்சபா தேர்தலை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வாக ரங்கோலி, கயிறு இழுத்தல், கபடி, பாட்டுப்போட்டி, நாடகம் உள்ளிட்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி அளவில் இன்று முதல் இப்போட்டிகள் நடக்கிறது. ஒன்றிய அளவில் ஜன., 19,20லும், மாவட்ட அளவில் ஜன.,22ல் இப்போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் குழுவினர் மாநில போட்டிக்கு செல்கிறார்கள். என்றனர்.

