/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பு கோயில் இடங்கள் மீட்டு ரூ. 7.20 லடசத்திற்கு ஏலம்
/
ஆக்கிரமிப்பு கோயில் இடங்கள் மீட்டு ரூ. 7.20 லடசத்திற்கு ஏலம்
ஆக்கிரமிப்பு கோயில் இடங்கள் மீட்டு ரூ. 7.20 லடசத்திற்கு ஏலம்
ஆக்கிரமிப்பு கோயில் இடங்கள் மீட்டு ரூ. 7.20 லடசத்திற்கு ஏலம்
ADDED : ஜன 21, 2024 05:19 AM
ஆண்டிபட்டி: ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோடு அருகே உள்ளன.
ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இடங்கள் கடந்த ஆண்டு ஜூனில் ஹிந்து அறநிலை துறை மூலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட இடங்களை தரை வாடகைக்கு பயன்படுத்துவதற்கான ஏலம் ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்தது. கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஹிந்து அறநிலையத்துறை பெரியகுளம் சரக ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலையில் 8 இடங்களுக்கு நடந்த ஏலத்தில் ரூ.1000 டெபாசிட் செலுத்தி பலர் கலந்து கொண்டனர். 6 இடங்களுக்கான தரை வாடகையாக மொத்தம் ரூ. 7 லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இடங்களை தரை வாடகைக்கு ஏலம் எடுத்தவர்கள் 5 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. இரு இடங்களுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.