/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கர்ப்பிணிகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்குமா என எதிர்பார்ப்பு; 3 ஆண்டுகளாக வழங்காததால் தாய்மார்கள் தவிப்பு

ADDED : ஜன 14, 2024 04:05 AM
கர்ப்பிணிகளுக்கு மாநில அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், மத்திய அரசு சார்பில் மாத்ரூ வந்தனா திட்டம் ஆகியவற்றின் சார்பில் கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் முடிந்த பின்பு வரை ரூ.18 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட கிராம செவிலியரிடம் பதிவு செய்து ஆரம்ப சுகாதார நிலையம் பதிவெண் வழங்கும். இப் பதிவு செய்தவுடன் ரூ.4 ஆயிரம் கர்ப்பிணியின் வங்கி கணக்கில் வரவாகும். அடுத்த தவணை 6 மாதத்திற்குள் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். பின்னர் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள மாத்திரைகள், சத்து மாவுகள் அடங்கிய தொகுப்பு இரண்டு தவணைகளாக வழங்கப்படும். பிரசவம் ஆன பின் குழந்தை 10 மாதம் ஆகும் போது தடுப்பூசி செலுத்துவது வரை ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் கடைசி 4 ஆயிரம் ரூபாய் கிடைக்காது. இதில் முதல் ஆறு மாதங்களுக்குள் கொடுக்கப்படும் இரண்டு தவணைகள் ரூ.8 ஆயிரம் 2021 ல் இருந்து இன்று வரை அதாவது 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினரிடம் கேட்டதற்கு, முதல் இரண்டு தவணைகள் மத்திய அரசு வழங்குகிறது. இத் தொகை நிலுவையில் இருப்பதற்கு காரணம் அங்கன்வாடி வரைபடங்கள் கோரினர். மாநில அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரைபடம் வழங்கி, பின்னர் மத்திய அரசு கேட்ட அங்கன்வாடி வரைபடம் கடத்தாண்டு தயாரிக்கப்பட்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வெப்சைட்டில் அப்லோடு செய்துவிட்டோம். ஆனால் மத்திய அரசு இதுவரை நிலுவை தொகையினை விடுவிக்கவில்லை, மாநில அரசு தரும் ஒதுக்கீடுகள் வழக்கம் போல் தரப்பட்டு வருகிறது என்கின்றனர்.