/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொங்கல் தொகுப்பு பெறாதோருக்கு மீண்டும் கிடைக்குமா என எதிர்பார்ப்பு
/
பொங்கல் தொகுப்பு பெறாதோருக்கு மீண்டும் கிடைக்குமா என எதிர்பார்ப்பு
பொங்கல் தொகுப்பு பெறாதோருக்கு மீண்டும் கிடைக்குமா என எதிர்பார்ப்பு
பொங்கல் தொகுப்பு பெறாதோருக்கு மீண்டும் கிடைக்குமா என எதிர்பார்ப்பு
ADDED : ஜன 19, 2024 05:43 AM
தேனி: தேனி மாவட்டத்தில் கைரேகை பதிவாகாத முதியோர், வெளியூர் சென்றிருந்தவர்கள் பொங்கல் தொகுப்பு பெற முடியாத விடுபட்டவர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த ஆண்டைப்போல் ஜன.,31 வரை வழங்க வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் 77 கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் முழுநேர, பகுதிநேர ரேஷன் கடைகள் 526 செயல்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள 4.26 லட்சம் அரிசி ரேஷன் கார்டுதார்கள் உள்ளன. இக் கார்டுகளுக்கு பொங்கல் பண்டிகையை யொட்டி தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி, முழு கரும்பு, பணம் ரூ. ஆயிரம் ஆகிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. முதலில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு பொங்கல் தொகுப்பு கிடையாது என அரசு அறிவித்தாலும் பின்னர் அனைத்து அரிசி அட்டை தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றனர். இதனை தொடர்ந்த பொங்கல் தொகுப்பு ஜன., 10 முதல் ஜன., 14 வரை ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட்டது.இத்தொகுப்பினை பயோ மெட்ரிக் முறையில் மட்டும் வழங்கவும், பிராக்ஸி முறையில் வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டப்பட்டிருந்தது. மாவட்டத்தில் ஜன., 14 மாலை வரை 3லட்சத்து 96ஆயிரத்து 143 பேருக்கு அதாவது 92.9 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கியது போக மீதத்தொகையை ரேஷன்கடை பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைத்தனர். பச்சரிசி, சீனி ஆகியவற்றை மாதந்தோறும் வழங்குவது போல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தொகுப்பு வழங்கும் போது வெளியூர்களில் இருந்தவர்கள், பயோ மெட்ரிக்கில் கைரேகை பதிவாகாதவர்கள் இதனை வாங்க முடியாமல் போனது. கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு ஜன., 31 வரை வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் தொகுப்பு வாங்காதவர்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவும் அரசு இதுவரை வழங்கப்பட வில்லை கூட்டுறவுத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பொங்கல் தொகுப்பு பெறதவர்களுக்கு தற்போது மீண்டும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

