/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குண்டளை அணை-செண்டுவாரை ரோடு சீரமைக்கும் பணி துவக்கம்
/
குண்டளை அணை-செண்டுவாரை ரோடு சீரமைக்கும் பணி துவக்கம்
குண்டளை அணை-செண்டுவாரை ரோடு சீரமைக்கும் பணி துவக்கம்
குண்டளை அணை-செண்டுவாரை ரோடு சீரமைக்கும் பணி துவக்கம்
ADDED : பிப் 02, 2024 06:03 AM

மூணாறு : மூணாறு அருகே குண்டளை அணையில் இருந்து செண்டுவாரை எஸ்டேட்டுக்குச் செல்லும் ரோடு சீரமைக்கும் பணி துவங்கியது.
குண்டளை அணை முதல் செண்டுவாரை எஸ்டேட் லோயர் டிவிஷன் வரை 2.5 கி.மீ. தூரம் ரோடு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது.
அதனால் மருத்துவம் உள்பட அவசர தேவைக்கு விரைவில் கடந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டதால் உயிர் பலிகள் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு. ஆகவே ரோட்டை சீரமைக்குமாறு வலியுறுத்தி பொதுமக்கள் மூணாறு, வட்டவடை ரோட்டில் குண்டளை அணை அருகே கடந்த அக்.3ல் மறியல் போராட்டம் நடத்தினர்.
அதனையடுத்து குண்டளை அணை முதல் செண்டுவாரை லோயர் டிவிஷன் வரை ரோடை சீரமைப்பதற்கு மாவட்ட ஊராட்சி சார்பில் ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியைக் கொண்டு ரோடு சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.