/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டில் குழந்தை கழுத்தில் கத்தி வைத்து பெண்களிடம் 14.5 பவுன் நகை கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

ADDED : ஜூன் 15, 2025 01:33 AM
தேனி:தேனி மாவட்டம் வீரபாண்டியில் வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அங்கிருந்த பெண்களிடம் 14.5 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடுகின்றனர்.
வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி போதுமணி 45. அங்குள்ள வீட்டில் மகன், மருமகள், மகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை மங்கி குல்லா அணிந்திருந்த முகமூடி கொள்ளையர்கள் மூவர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து போதுமணி வீட்டிற்குள் புகுந்தனர். பூட்டப்படாத கதவை தள்ளி உள்ளே சென்று போதுமணி உள்ளிட்டோரை தாக்கினர். போதுமணியின் ஒன்றரை வயது பேரனின் கழுத்தில்கத்தியை வைத்து மிரட்டி, பெண்கள் அணிந்திருந்த தாலி செயின், கம்மல், செயின் என ரூ.4.35 லட்சம் மதிப்பிலான 14.5 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர். வீரபாண்டி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரிக்கிறார். தேனி, வீரபாண்டி, கோடங்கிபட்டி என 15 கிலோ மீட்டருக்குள் கடந்த சில நாட்களில் 4வீடுகளில் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.