/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் வாகனம் மோதி மில் தொழிலாளி பலி
/
போலீஸ் வாகனம் மோதி மில் தொழிலாளி பலி
ADDED : ஜன 24, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி ஹவுசிங் போர்டு 4வது தெரு ராதாகிருஷ்ணன் 69.
அல்லிநகரம் தனியார் ஜின்னிங் தொழிற்சாலையில் பருத்தி எடை போடும் தொழில் செய்கிறார். டூவீலரில் பழனிசெட்டிபட்டி தனியார் மஹாலுக்கு சென்றார். தேனி கம்பம் ரோடு சுப்பன் செட்டித்தெரு டீ கடை அருகே ஆயுதப்படை முதல் நிலை போலீஸ்காரர் அங்குச்சாமி ஓட்டி வந்த டெம்போ டிராவலர் வேன், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ராதாகிருஷ்ணன், 108 ஆம்புலன்சில் தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆயுதப்படை போலீஸ்காரர் மீது தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

