ADDED : ஜன 24, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளத்தில் தொண்டை மண்டல முதலியார் சங்கம் 34 வது ஆண்டு விழா நடந்தது.
நிர்வாகி சுரேஷ் தலைமை வகித்தார். மாநில தலைவர் இசக்கி, முனைவர்கள் அருணகிரி, நமச்சிவாயம், உத்தண்ட கிருஷ்ணன், சுகுமாரன் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ராமகிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் ஜெகன், பொருளாளர் பாலா, சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட தொண்டை மண்டல முதலியார் மேம்பாட்டு தலைவர் ராஜேஸ்வரி, டாக்டர் அபூர்வ ராகவன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
பெரியகுளம்- குமுளி ரயில் பாதை அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி முத்துக்குமார் நன்றி கூறினார்.

