ADDED : செப் 26, 2025 02:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழா ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம் சார்பில் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனை நடந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.
மாலையில் மழை வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து எல். எப். ரோடு, மெயின் பஜார், நடுத்தெரு வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். அம்மன் மற்றும் சுவாமி வேடங்கள் அணிந்து பக்தர்கள் உடன் சென்றனர். கரகாட்டம், செண்டா மேளம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவிளக்கு, முளைப்பாரி எடுத்த அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.