/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாராயணத்தேவன்பட்டி --- சுருளிப்பட்டி சாலை பணி நுாறுநாள் திட்டத்தில் தீவிரம் தினமலர் செய்தி எதிரொலி

ADDED : ஜன 21, 2024 05:19 AM
கம்பம்: நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளி அருவியை இணைக்கும் பழைய சுருளி ரோடு புதுப்பிக்கும் பணி மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..
பிரசித்திபெற்றசுருளி அருவி ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாக விளங்குவதால் தினமும் குளிக்க நூற்றுக்கணக்கில் வருகின்றனர். சுருளி அருவிக்கு செல்ல தற்போதுள்ள ரோட்டை தவிர்த்து பழைய சுருளி ரோடு என்ற ரோடு உள்ளது.
சுருளிப்பட்டியிலிருந்து சுருளி அருவிக்கு செல்லும் இந்த ரோடு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. விசேஷ நாட்களில் போலீசார் இந்த ரோட்டை ஒருவழிப்பாதையாக பயன்படுத்துகின்றனர். ஆனால் நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளிப்பட்டி வரை ரோடு 160 மீட்டர் தூரத்திற்கு தனியாரிடம் சிக்கியிருந்தது. சமீபத்தில் தனியாரிடமிருந்து அந்த இடத்தை மீட்டனர். நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளிப்பட்டி வரை ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கைகள் துவங்கியது. ரூ.50 லட்சம் செலவில் பாலம், 165 மீட்டர் தூரத்திற்கு ரோடு போடும் பணிகளுக்கான பூமி பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.ஆனால் பணி துவக்காமல் இருந்தனர்.
இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக தற்போது ரோடு அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. நூறு நாள் வேறு உறுதி திட்டத்தின்கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரோடு பணிகளில் மெட்டல் கற்கள் கொட்டி மெத்தி வருகின்றனர். தார் ரோடு அமைக்கவில்லை. தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகள் முடிந்த பின் ரூ.46 லட்சத்தில் பாலம் கட்டப்படுகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் நாராயணத்தேவன் பட்டியிலிந்து சுருளி அருவிக்கு பைபாஸ் ரோடு போன்று பயன்படும்.