/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 மாதமாக சம்பளம் வழங்காத அவலம்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 மாதமாக சம்பளம் வழங்காத அவலம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 மாதமாக சம்பளம் வழங்காத அவலம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 மாதமாக சம்பளம் வழங்காத அவலம்
ADDED : மார் 26, 2025 05:06 AM
கம்பம் : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால், வேலை செய்யும் தொழிலாளர்கள் ஊராட்சி செயலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊராட்சிகளில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துகிறது. இத் திட்டத்தில் முதலில் நூற்றுக்கணக்கில் ஆர்வமாக தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். தினமும் சம்பளம் ரூ.311 ஆகும். தற்போது படிப்படியாக குறைந்து 20 முதல் 30 பேர்கள் என்ற நிலை உள்ளது. இதற்கு காரணம் ஊராட்சிகளில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன.
கடந்த சில ஆண்டுகளாகவே சம்பளம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
மத்திய அரசு இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்ய பல கேள்விகளை கேட்டு நிதியை நிறுத்துகிறது. கடந்த 4 மாதங்களாக சம்பளத்திற்கான நிதி ஒதுக்கீடு வழங்கவில்லை. இதனால் வாரந்தோறும் வழங்கப்படும் சம்பளம் வழங்கவில்லை.
இத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தினமும் ஊராட்சிகளுக்கு சென்று, செயலர்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர். .
ஊராட்சி செயலர்கள் கூறுகையில், ' ஊராட்சி கணக்கில் பணம் ஏறினால் தான் எடுத்து தர முடியும். மத்திய அரசு தர நிதி வழங்கவில்லை. மாநில அரசும் கண்டு கொள்ளாமல் உள்ளது. தொழிலாளர்கள் எங்களிடம் வந்து வாக்குவாதம் செய்வது சிரமமாக உள்ளது,' என்கின்றனர்.