நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே வேப்பவயல் பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் 30. இவரது அண்ணன் முத்துப்பாண்டி 32.
இருவரும் போடி அருகே நாகபுரத்தில் தங்கி சிலமலையில் உள்ள டீ கடையில் வேலை பார்கின்றனர். நேற்று சதீஸ்குமார் ராசிங்காபுரம் சென்று விட்டு நாகலாபுரத்திற்கு தேவாரம் ரோட்டில் டூவீலரில் வந்துள்ளார். (ஹெல்மெட் அணியவில்லை) திம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த ஜீப் டூவீலர் மோதியதில் சதீஷ்குமார் இறந்தார். பழனிசெட்டிபட்டி ஜீப் டிரைவர் ரஞ்சித் 39, கைது செய்தனர்.

