/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒருவர் கண்தானம் செய்தால் நால்வரின் வாழ்வில் ஒளி ஏற்றலாம் தேனி மருத்துவக்கல்லுாரி கண் சிகிச்சைத்துறை தலைவர் தகவல்
/
ஒருவர் கண்தானம் செய்தால் நால்வரின் வாழ்வில் ஒளி ஏற்றலாம் தேனி மருத்துவக்கல்லுாரி கண் சிகிச்சைத்துறை தலைவர் தகவல்
ஒருவர் கண்தானம் செய்தால் நால்வரின் வாழ்வில் ஒளி ஏற்றலாம் தேனி மருத்துவக்கல்லுாரி கண் சிகிச்சைத்துறை தலைவர் தகவல்
ஒருவர் கண்தானம் செய்தால் நால்வரின் வாழ்வில் ஒளி ஏற்றலாம் தேனி மருத்துவக்கல்லுாரி கண் சிகிச்சைத்துறை தலைவர் தகவல்
ADDED : செப் 26, 2025 02:26 AM

ஒருவர் கண்தானம் செய்தால் பார்வை குறைபாடு உள்ள நால்வரின் வாழ்வில் ஒளி ஏற்றலாம். இதனை புரிந்து பொது மக்கள் இறந்தவர்களின் கண்களைதானமாக வழங்க முன்வர வேண்டும்.' என, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண் சிகிச்சைத்துறை துறை தலைவர் டாக்டர் கணபதிராஜேஷ் தெரிவித்தார்.
விபத்து மற்றும் நோய்கள் மூலம் கண் பார்வை இழப்பு ஏற்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இறந்த பின் கண்களை தானம் செய்வோரின்எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. கண்தானம் யாரெல்லாம் செய்யலாம்.
தானம் வழங்குவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்தும்,கண்தானம் செய்வதற்கான அவசியம் குறித்தும். தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண் சிகிச்சைத்துறைத்தலைவர் டாக்டர் கணபதிராஜேஷ்தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக பேசியதாவது:
கண்தானம் வழங்க வேண்டிய அவசியம் என்ன இந்தியளவில் ஆண்டிற்கு 2 லட்சம் கார்னியா மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். அதில் 10 சதவீதம்மட்டுமே நடத்தப்படுகின்றன. அதாவது நமக்கு தேவை 2 லட்சம் கார்னியாக்கள். ஆனால் 25 ஆயிரம் மட்டுமே கிடைக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு இறந்தவர்களின் கண்களை தானம் செய்வதுதான் ஒரே வழி. இந்நிலையில் இந்தியாவில் ஆண்டிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 1.10 சதவீதம் பேரின் கண்களை தானம் செய்தாலே நமக்கு தேவையான 2 லட்சம் பேரின் வண்ணமயமானவாழ்க்கைககான கண்ணொளியை வழங்க முடியும். அதற்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
கருவிழி பிரச்னையால் பார்வை குறைபாடு ஏற்படுவது குறித்து இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு கருவிழி பிரச்னையால் பார்வை குறைந்துள்ளது. இதில் 10 லட்சம் பேருக்கு 2 கண்களிலும் கருவிழி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றால், இறந்தவர்களின் கருவிழியை வைத்தால் மட்டுமே அவர்களுக்குமுழுமையான பார்வையை வழங்க இயலும். இதைத்தவிர பார்வை ஏற்படுவதற்கு வேறு சிகிச்சை வழங்கவோ, வாய்ப்புகள் இல்லை என்பதால்விழிப்புணர்வை தீவிரப்படுத்தி வருகிறோம்.
நரம்பு பாதிப்பு ஏற்பட்டு பார்வையிழந்தால் அதற்கு சிகிச்சை இல்லை. ஆனால்கருவிழி பிரச்னையால் பார்வை குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு பார்வை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு ஒரே தீர்வு இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய பொது மக்கள் முன்வருவது மட்டுமே. இந்தியாவில் ஆண்டிற்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 1 சதவீதம் பேர் கண் தானம் வழங்கினாலே ஒரு கோடி பேருக்கு கண்ணொளி வழங்க இயலும்.
இறந்தவர்களின் கண்களை பாதுகாக்கும் நடைமுறை பற்றி கண் தானம் செய்தால் மற்ற உடல் உறுப்புகள் தானம் செய்ய முடியாது போன்ற தவறான நம்பிக்கைகள் உள்ளன.பொது மக்கள் இதுபோன்ற மூட நம்பிக்கைகளை நம்ப வேண்டாம். கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கண் கண்ணாடி அணிந்தவர்கள் கண் தானம் வழங்கலாம். ஒருவர் இறந்த உடன் கண்களை மூடி வைக்க வேண்டும். கருவிழி உலர்ந்து போகமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் கண் தானம் செய்தால் நால்வருக்கு எப்படி பார்வை கிடைக்கும் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கண் வங்கி இல்லை. ஆனால் சராசரியாக மாதத்திற்கு 7 முதல் 8 பேர் கண் தானமாக வழங்குகின்றனர். அவை அங்கீகரிககப்பட்ட தனியார் கண் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. கண்தானம் என்பது கண்ணின் கருவிழி அதாவது கார்னி யல் பகுதியைத் தானமாக தருவதாகும்.
இதில் முன்பகுதி, பின் பகுதி உள்ளது. (லேயராக இருக்கும்) இந்தகார்னியா லேயர் முன்பகுதி பின் பகுதி தேவைப்படுவோருக்கு பொருத்தலாம். ஆக ஒருவர் தனது ஒரு ஜோடி கண்களை தானமாக வழங்கும் போது, அவரது 4கார்னியாக்கள் நால்வருக்கு பயன்படும். இதனால் கண்தானம் வழங்கியவர் பெரும் புண்ணியம் பெறுவார். ஒருவர் இறந்த பிறகே அவரின் கண்தானமாக பெறப்படுகிறது. சிறிய வயதினர் முதல் முதியவர் வரை யார் வேண்டுமானாலும் கண்தானம் வழங்கலாம். இறந்த 4 முதல் 6 மணி நேரத்தில் கண்தானம் வழங்கப்பட வேண்டும். இரண்டு சாட்சிகள் முன்னிலையில் உறவினரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் படிவம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
யா ரெல் லாம் கண்தானம் செய்யலாம் எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பி, சி நோய், ரேபிஸ், ரத்த புற்றுநோய் டெட்டனஸ், காலரா, காமாலை, மூளைக்காய்ச்சல், மூளையழற்சி போன்ற தொற்றுநோய் உள்ளவர்கள் கண்களை தானம் வழங்க முடியாது. விஷம் குடித்து, துாக்கிட்டு இறந்தவர்களும் வழங்க இயலாது.
விழிப்புணர்வு பணிகள் மருத்துவக்கல்லுாரி கண் மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு பணிகளும், விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்து கிறோம்.