/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சிகளில் 'ஜல் ஜீவன்' திட்ட குழாய்களில் மீட்டர் பொருத்தும் பணி பயன்பாட்டிற்கு வராது என்பதால் மக்கள் குழப்பம்

ADDED : ஜன 23, 2024 05:06 AM
கம்பம்: நகராட்சிகளில் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் வழங்கும் குடிநீர் இணைப்புகளைக்கு மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெறுவது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
உள்ளாட்சிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினமும் தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி மத்திய மாநில அரசுகள் பகிர்ந்தளிக்கிறது. முதலில் ஊராட்சிகள், தற்போது பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பகிர்மான குழாய் பதிப்பது, மேல்நிலைத் தொட்டிகள் கட்டுவது, புதிய உறை கிணறுகள் அமைப்பது, குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது என பல பணிகள் இதில் செய்யப்படுகிறது -
ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இந்த திட்டத்தில் மீட்டர் பொருத்தவில்லை. ஆனால், நகராட்சிகளில் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது.
புதிதாக இணைப்பு கொடுக்கும் வீடுகளுக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து சின்னமனூர் நகராட்சியில் விசாரித்த போது, ஏற்கெனவே நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்டணம் தான் வசூலிக்கப்படும். ஜல் ஜீவன் ஒப்பந்தத்தில் மீட்டர் மதிப்பீட்டு தொகையில் சேர்த்துள்ளதால், பொருத்துகின்றனர். ஆனால் மீட்டர்களை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்கின்றனர். பயன்படுத்தும் திட்டம் இருந்தால் பொருத்த வேண்டும். இல்லையென்றால் எதற்காக வீண் செலவு.
தேனி மாவட்டத்தில் சின்னமனூர், போடி, தேனி நகராட்சிகளில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. காட்சி பொருளாக இருக்க ஏன் மீட்டர்களை பொருத்த வேண்டும். நிதி வீணடிக்கப்படுவதை தவிர்க்க நகராட்சிகளின் இயங்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.