/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெளியூர் செல்பவர்கள் போலீசிற்கு தகவல் தெரிவித்து செல்வது அவசியம் தேனி டி.எஸ்.பி., தகவல்

ADDED : பிப் 12, 2024 05:54 AM

தேனி: 'பழனிசெட்டிபட்டி மகாலட்சுமி நகரில் வசிக்கும் மக்கள் வெளியூர் செல்லும் போது, போலீசாருக்கு தகவல் தெரிவித்து செல்வது அவசியம்.' தேனி டி.எஸ்.பி., பார்த்திபன் பேசினார்.
பழனிசெட்டிபட்டியில் உள்ள மகாத்மா நகர், ஆஞ்சநேயர் காலனி, டீச்சர் காலனி, தென்றல் நகர் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறின. குடியிருப்பு பகுதிகளில் பொது மக்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
இதையடுத்து பழனிசெட்டிபட்டி மகாலட்சுமி நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டன.
காவலாளி அறையை திறந்து வைத்து டி.எஸ்.பி., பேசுகையில், 'பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள், அருகில் உள்ள வீடுகளிலும் தெரிவித்து செல்லுங்கள். கதவில் பூட்டுகளை உட்புறமாக பூட்டி செல்லுங்கள். கண்காணிப்பு கேமரா பொருத்துவது உங்களுக்கு மட்டும் இன்றி அருகில் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
இரவு நேரங்களில் வீட்டின் வெளிப் பகுதியில் உள்ள விளக்குகளை அணைக்க வேண்டாம். ேகமரா தகவல்கள் சேமிப்பு கருவியை அனைவருக்கும் தெரியுமாறு வைக்க வேண்டாம். அதிகப்படியான நகைகள் இருந்தால் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டும்.', என்றார். பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், குடியிருப்போர் நலச்சங்க தலைவர் செந்தில்ராம்குமார், செயலாளர் சார்லஸ்ராஜா, பொருளாளர் திருமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.