/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணை நீர் திறப்பு அதிகரிப்பு
/
பெரியாறு அணை நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : ஜன 19, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு 511 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 139 அடியாக இருந்தது. (மொத்த உயரம்152 அடி). நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை.
தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 300 கன அடி நீர் நேற்று காலையில் இருந்து வினாடிக்கு 511 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 296 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 6886 மில்லியன் கன அடியாகும்.
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் தேனிமாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 27 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி 46 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.

