ADDED : ஜன 14, 2024 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நகராட்சிக்கு வைகை அணை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.
அங்கிருந்து குழாய் மூலம் கே.ஆர்.ஆர்., நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அனுப்ப படுகிறது.
இங்கிருந்து நகரின் மற்ற பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சமதர்மபுரம் சந்திப்பில் உள்ள குடிநீர் குழாய் சேதத்தால் தண்ணீர் பல அடி உயரத்திற்கு மேல எழுந்தது.
இதனால் அப்பகுதியில் சென்றவர்கள், கடைகளில் நின்றவர்கள் மீது நீர் மழைபோல் விழந்தது.
குழாய் சேதத்தால் தண்ணீர் வீணாகி போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெரு, நான்கு குழாய் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது.
நகராட்சி அதிகாரிகள் சேதமடைந்துள்ள குழாய்களை கண்டறிந்து சீரமைக்க வேண்டும்.

